பொங்கல் முடித்து ஊர் திரும்புவோருக்காக 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...!

According to the Department of Transport, 16,000 special buses will be operated for those returning home after Pongal.

பொங்கல் முடித்து ஊர் திரும்புவோருக்காக 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு வசதியாக கடந்த 11 ஆம் தேதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த பேருந்துகளில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட்டுள்ளதால், நாளை முதல் பண்டிகை முடித்து ஊர் திரும்புவோருக்காக16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.