பாமக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானம் நிறைவேற்றம்!

Passage of 16 resolutions including the need to ban election polls at the BJP General Assembly meeting. Ramadoss

பாமக பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

பாமக பொதுக்குழு கூட்டம் கட்சி நிறுவுனர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர். 2021-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமகவை நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும், சட்டமன்ற தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு பற்றி முடிவெடுக்க ராமதாசுக்கு அதிகாரம், தமிழக அரசு பணிகளை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டடுள்ளது.