கரூர் :கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் அரசியல் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்திகள் பரப்பிய 25 சமூக வலைதள கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக இதுவரை 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை, வதந்திகளை பரப்ப வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை அறிவுறித்தியுள்ளது. இந்த நிலையில், கரூர் துயரச் சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி சகாயம் ஜேம்ஸ், தவெகவைச் சேர்ந்த சிவநேஸ்வரன், சரத்குமார் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் வைக்கபடவுள்ளனர்.
