எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

tamil nadu fishermen arrested

இலங்கை : தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  கைது செய்துள்ளனர். முதற்கட்டமாக அவர்கள் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் என தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.  இவர்கள் மீன்பிடித்துள்ள பகுதிகள் இலங்கையின் விரிவாக்கப் பகுதிகளில் உள்ளதால், சட்டப்படி அதற்கான அனுமதி இல்லாமல் மீன்பிடித்ததாகவும் சொல்லப்பட்டது.

இலங்கைக்கடற்படையினர், சுமூகமாக இந்த மீனவர்களை கைது செய்து, அவர்கள் படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். இந்த சூழலில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 34 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார்.

இந்த சூழலில், கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மேலும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, விசைப்படகுடன் அவர்களை கைது செய்துள்ளது. இலங்கை காங்கேசன் கடற்பரப்பில் படகுடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள், விசாரணைக்குப் பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்