+12 தேர்வு முடிவுகள் : வெற்றி பெறாதவர்களுக்கு மறுதேர்வு எப்போ?

12+ தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு ஜூன் 28 முதல் ஜூலை 7 வரை துணைத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை : தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.இந்த ஆண்டு பிளஸ் டூ பொதுத்தேர்வில் மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 95.20% ஆக உள்ளது. மாணவர்களில் 93.19% பேரும், மாணவிகளில் 97% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகள் தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட முன்னிலை வகித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற்ற இந்தத் தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியானதால் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது.தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 28 முதல் ஜூலை 7 வரை துணைத் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை பின்வரும் இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்:

மேலும், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்களுக்கு SMS மூலமும், 78452 52525 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமும் முடிவுகளைப் பெறலாம். பயின்ற பள்ளிகளிலும் முடிவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் தமிழ்நாட்டில் கல்வித்தரம் மேம்பாட்டுக்கு சான்றாக அமைந்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.