தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தினக்கூலிகள், கட்டட வேலைகள் செய்பவர்கள் உள்ளிட்ட பல தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
unknown nodeஇந்நிலையில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 1778 தொழிற்சாலைகளை சேர்ந்த 21,770 பேருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.2.177 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.