தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் விற்பனை தடை செய்யவும், ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது என இந்த வழக்கில் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஜூலை 15-க்குள் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால், தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இந்த வழக்கை வருகின்ற 20 தேதிக்கு ஒத்திவைத்தது.