அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை,நீலகிரி,தேனிமாவட்டங்களுக்குஅதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதி தீவிர கனமழை பெய்யும் என்பதால்நீலகிரி,கோவை,தேனிமாவட்டங்களுக்குரெட்அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரிமாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. சூறாவளி காற்றுடன்மழைபெய்து வருவதால் ஏராளமான மின் கம்பங்களும், மரங்களும் சாய்ந்து விழுந்துள்ளன.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.