அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதி தீவிர கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால் ஏராளமான மின் கம்பங்களும், மரங்களும் […]
உதகையை அருகே தமிழக மற்றும் கர்நாடக எல்லை பகுதியான கக்கனள்ளாவில் உள்ள 88 வருடமான பாலத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே கக்கனள்ளாவில் 1930-ம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 88 ஆண்டு பழமை வாய்ந்த பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களுக்கு சென்று வருகிறது. இந்நிலையில், பாலத்தின் மேல் இருக்கும் வளைவுகள் சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளதால் […]
நீலகிரியில் பருவமழையால் பழுதடைந்த தமிழக-கேரள எல்லையான கீழ்நாடுகாணி பகுதியில், சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரள மாநிலம் திருச்சூர், பாலக்காடு, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள பருவ மழையால் இப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சரக்கு லாரிகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதை சீரமைக்கும் விதமாக சாலையோரத்தில் தடுப்புச்சுவர் மற்றும் சாலை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று […]
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட விடுதிகள் அண்மையில் மூடி சீல்வைக்கப்பட்டன. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் தேவாலாவில், வனப்பகுதியின் உள்ளே 230 ஏக்கர் பரப்பில் இயங்கிவரும் சொகுசு விடுதியை மூடி சீல்வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவாலா கிராமத்தில் 180.8 ஏக்கர் மற்றும் 49.9 ஏக்கர் வன நிலத்தில் இந்த சொகுசு விடுதி அமைந்துள்ள நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் […]
நீலகிரி மாவட்டம் உதகையில், காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடையும் நிலை எற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி வரும் காட்டெருமைகள், உணவுதேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. நேற்று உதகை – குன்னூர் நெடுஞ்சாலையில், பிக்கட்டி என்ற பகுதியில் காட்டெருமைகள் சுற்றி திரிந்து கொண்டிருந்தன. இதனால், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் கவனத்துடனும்,பயத்துடனும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கோயம்புத்தூரானது தமிழகத்தின் மான்செஸ்டராக விளங்குகிறது. தொழில்நகரமாக விளங்குகிறது. இந்த கொயம்பத்தூரின் புதிய அடையாளமாக ஈசா மையம் விளங்குகிறது என இந்திய ரயில்வே துறை சொல்லிவருகிறது. தற்போது ரயில் பெட்டியிலும் அந்த ஈசா மையம் போட்டோ போட்டு பெயர் பலகையை ரயில்வே துறை சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் இன்னும் சில எக்ஸ்ப்ரஸ் ரயில்களில் ஈசா மையத்திற்கு ரயில்வே துறை விளம்பரம் செய்து வருகிறது.