அமிதாப்பிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்.!

நேற்று நள்ளிரவு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை

நேற்று நள்ளிரவு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்த செய்தியை இருவருமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர். இந்நிலையில், அமிதாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி அறிந்த  ரஜினிகாந்த்  தொலைப்பேசி  வாயிலாக உடனடியாக அவரிடம் உடல் நலம் பற்றி விசாரித்தார்.

மேலும் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் எனவும் ரஜினிகாந்த்  தெரிவித்துள்ளார்.