தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

தமிழகத்தில் தற்போது பருவாமலை துவங்கியுள்ள நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், வடதமிழகம், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மத்திய மேற்கு, வட தமிழகம், ஆந்திர கடலோர பகுதிக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.