பொதுமுடக்கம் -கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு

முழு ஊரடங்கு அமலாகும் போது, கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் சண்முகம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

முழு ஊரடங்கு அமலாகும் போது, கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் சண்முகம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி  முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

எனவே சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலாகிறது. நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலாகும் போது, கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் சண்முகம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர், சுகாதார செயலருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.