"சீரமைப்போம் தமிழகத்தை" டிசம்பர் 13-ஆம் தேதி துவங்குகிறது மக்கள் நீதி மையத்தின் தேர்தல் பிரச்சாரம்!

People's Justice Center party leader Kamal Haasan has said that they will start their election campaign on December 13.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வருகிற டிசம்பர் மாதம் 13ஆம் தேதி மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன. ஒவ்வொருவரும் மேடைகளிலும் சமூக வலைதளங்களிலும் தங்களது கட்சிகளுக்கான ஆதரவை மக்கள் மத்தியில் தேடி வருகின்றனர். அதிமுக திமுகவுக்கு இடையே எப்போதும் வழக்கம்போல பேச்சுவார்த்தை பிரச்சாரம் எழுப்பப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ரஜினியும் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சட்டமன்ற தேர்தல் குறித்த பிரச்சாரத்தில் டிசம்பர் 13-ஆம் தேதி மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நுழைய உள்ளார். முதல் கட்டமாக சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெயரில் தூத்துக்குடி கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை கமலஹாசன் அவர்கள் துவங்க உள்ளார்.