கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனியின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.தற்போது வரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 397 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதனிடையே ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் எம்எல்ஏ பழனியின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் கேட்டறிந்தார்.மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் , தேவையான மருத்துவ உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.தான் நலமுடன் இருப்பதாக முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார் எம்எல்ஏ பழனி.
unknown node