தோனி எப்போதும் மக்களின் இதயத்தில் Captain Cool-ஆக இருப்பார். – தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் பன்பையும், கிரிக்கெட் திறனையும் சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி பற்றி பதிவிட்டுள்ளார்.
அதில், ‘ எம்.எஸ். தோனி தனது கடின உழைப்பு மற்றும் மிகச்சிறந்த கிரிக்கெட் திறன் மூலம் இந்திய கிரிக்கெட்டானது வெற்றியின் உச்சத்திற்கு சென்றது. தனது கூலான மனோபக்குவத்தை காத்துக்கொண்டு, பாதகமான சூழ்நிலைகளை கூட இந்தியாவிற்கு சாதகமாக மாற்றுவதற்கான வழிகளை தோனி உருவாக்கினார். தோனி எப்போதும் மக்களின் இதயத்தில் Captain Cool-ஆக இருப்பார்.’ என பதிவிட்டு உள்ளார்.
unknown node