சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்.!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாய் 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,041 பேருக்கும் , திரு.வி.க. நகர் மண்டலத்தில் 790 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.