சென்னையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் பட்டியல் விபரம் இதோ!

சென்னையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் பட்டியல் விபரம்.

சென்னையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் பட்டியல் விபரம்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இந்த வைரஸ் பரவி வருகிற நிலையில், சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 214 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் 90 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வீடு வீடாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 1,61,72,106 பேருக்கு பரிசாதனை செய்யப்பட்டுள்ள நிலையில், 749 பேருக்கு அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, சென்னை மாநகராட்சி,  சென்னை மக்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறும், வெளியே வரும்போது அவசியம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டவர்களின் விபரம்:

திருவொற்றியூர் – 4

மணலி – 0

மாதவரம் – 3

தண்டையார்பேட்டை – 20

ராயபுரம் – 64

திருவிக நகர் – 31

அம்பத்தூர் – 0

அண்ணாநகர் – 22

தேனாம்பேட்டை – 18

கோடம்பாக்கம் – 24

வளசரவாக்கம் – 5

ஆலந்தூர் – 3

அடையார் – 7

பெருங்குடி – 7

சோழிங்கநல்லூர் – 2