கருப்பர் கூட்டம் என்ற அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், இவர்களின் இந்த செயலை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் கூறுகையில், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி, தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழ் மக்களின் இல்லங்களில் அன்றாடம் ஒலிக்கும் பக்தி பாடல் கந்தசஷ்டி கவசம் என்றும், இதை தவறாக விமர்சனம் செய்த கருப்பர் கூட்டம் என்ற அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.