ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அமைச்சவை பதவியேற்பு

ஆந்திர  முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அமைச்சவை பதவியேற்றுக் கொண்டது. ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர்

ஆந்திர  முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அமைச்சவை பதவியேற்றுக் கொண்டது.ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையின் கீழ் ஆந்திராவில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஜெகன் அமைச்சரவையில் 25 அமைச்சர்களை நியமனம் செய்தார்  .அவர்கள்  இன்று பதவி ஏற்றனர்.இவர்களுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.