ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அமைச்சவை பதவியேற்றுக் கொண்டது. ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையின் கீழ் ஆந்திராவில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஜெகன் அமைச்சரவையில் 25 அமைச்சர்களை நியமனம் செய்தார் .அவர்கள் இன்று பதவி ஏற்றனர்.இவர்களுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் வெற்றிபெற்றது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.நேற்று பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அதன்படி கலந்துகொண்டனர். பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் முடிவு செய்தனர்.ஆனால் நேற்று ஜெகன் மோகன் ரெட்டியின் […]