வேகமாக வந்து இரும்பு செக் போஸ்டில் மோதிய இளைஞர் உயிரிழப்பு – பதறவைக்கும் சிசிடிவி வீடியோ உள்ளே!

Two youths from Telangana district came fast and collided with an iron check post and one was thrown and died on the spot.

தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள இரு இளைஞர்கள் வேகமாக வந்து இரும்பு செக்போஸ்டில் மோதியதில் ஒருவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மச்செரியால் மாவட்டத்தின் ஜன்னாராம் பகுதியை நோக்கி இரு இளைஞர்கள் அதிவேகமாக பைக்கில் சென்று கொண்டிருந்தனர். எனவே தபல்பூர் சோதனை சாவடியில் வனத்துறை அதிகாரிகள் தடுப்பு கேட்டை கீழே இறக்கி இரு சக்கர வாகனத்தை நிறுத்தும் படியாக கையசைத்துள்ளனர். ஆனால் அதிவேகமாக பைக் ஓட்டி வந்த இளைஞர்கள் காவலர்களின் கை அசைவுக்கு இணங்காமல் தலையை குனிந்தபடி சோதனை சாவடி தடுப்பை கடந்துள்ளனர்.

வாகனத்தை ஓட்டிவந்த இளைஞன் லேசான காயங்களுடன் உயிர் தப்பி விட, பின்னால் அமர்ந்திருந்த இளைஞன் தலை இரும்பு தடுப்பில் வேகமாக மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வாலிபர் வெங்கடேஷ் கவுட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், இரு சக்கர வாகனம் ஒட்டியது பாண்டி சந்திரசேகர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான பாதை பதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node