ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஜூப்ளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், எல்பி நகர், யூசுப்குடா, அமீர்பேட்டை, மல்காஜ்கிரி, மாதப்பூர், மியாபூர், செரிலிங்கம்பள்ளி, சாந்தாநகர், கச்சிபௌலி, பேகம்பேட்டை, செகந்திராபாத், அல்வால், குதுபுல்லாபூர் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வரும் சனிக்கிழமை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு […]
தெலுங்கானாவில் பேய் பிடித்திருப்பதாக கூறி இளம்பெண்ணை உயிருடன் தீயில் வாட்டிய போலி சாமியார். தெலுங்கானாவில் விகாராபாத் மாவட்டம், கோகிந்தா கிராமத்தை சேர்ந்த தம்பதியின் 18 வயது மகளுக்கு உடல்நலபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அருகில் உள்ள நாட்டு வைத்தியர் எனக்கூறப்படும் ரபீக் பாபா என்பவரிடம் சென்றனர். அவர் இளம்பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பெரியளவில் தீ வளர்த்த பாபா தனது உதவியாளர்கள் உதவியுடன், இளம்பெண்ணின் கை மற்றும் கால்களை தீயில் வாட்டியுள்ளனர். இதனால் கதறி துடித்த […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 49 வயதான யஷ்வந்த் என்பவர் தனது மனைவி மற்றும் கள்ளக்காதலனை இருவரையும் கடப்பாரையால் தாக்கியும், ஸ்கூட்டிரைவரால் குத்தியும் கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கார் டிரைவராக பணியாற்றி வரும் யஷ்வந்த் என்னும் நபரின் மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். இவர்களது இந்த விவகாரம் அவருக்கு தெரிய வந்ததையடுத்து தொடர்ந்து தனது மனைவியிடம் இதை விட்டுவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும் மனைவி கள்ளக்காதலனுடன் வெளியில் சுற்றுவதும், தவறான உறவில் இருந்து வந்ததும் கணவருக்கு […]
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசர கால உதவி எண்களோடு ஸ்மார்ட் போன் வழங்க தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் பல பேர் உயிரிழந்துள்ளனர். வயது வித்தியாசமின்றி ஏற்பட்ட இழப்புகளால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சலுகைகளையும், ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அவசர கால உதவி எண்களுடன் ஸ்மார்ட் […]
தெலுங்கானா அரசுடன் பிளிப்கார்ட் நிறுவனம் சேர்ந்து “மெடிசின்ஸ் ஃப்ரம் தி ஸ்கை” திட்டத்தின் கீழ் மருந்து பொருட்களை ட்ரோன் மூலமாக விநியோகம் செய்கிறது. பிளிப்கார்ட் நிறுவனம், தெலுங்கானா அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து, “மெடிசின்ஸ் ஃப்ரம் தி ஸ்கை” திட்டத்தின் கீழ் தொலைதூர பகுதிகளுக்கு மருத்துவப் பொருட்களை, ட்ரோன் மூலமாக விநியோகங்களை மேம்படுத்துவதற்கும், நிறைவேற்றுவதற்கும் பணிபுரிய ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டமைப்பின் ஒரு பகுதியாக , வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட் ட்ரோன்கள் மூலமாக தடுப்பூசிகள் மற்றும் மருத்துவப் […]
ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரியாணியில் கூடுதல் லெக் பீஸ் இல்லை என்று தெலுங்கானா அமைச்சர் கேடிஆரிடம் புகார்,பதில் ட்வீட் செய்த அமைச்சர்! கொரோனா ஒரு புறம் வாட்டி வதைக்கும் நிலையில் தெலுங்கானாவால் ஒரு நபர் ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரியாணியில் லெக் பீஸ் இல்லை என்று தெலுங்கானா நகராட்சி நிர்வாக அமைச்சர் கே டி.ராமராவ்விடம் ட்விட்டரில் புகார் தெரிவித்துள்ளார். அதில் அந்த நபர் தான் Zomatto வில் பிரியாணியுடன் கூடுதல் மசாலா மற்றும் கூடுதல் லெக் பீஸ் ஆர்டர் […]
தெலுங்கானாவில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும், திருமண நிகழ்வு, துக்க நிகழ்வு போன்ற நிகழ்வுகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தெலுங்கானா […]
மூத்த மருத்துவர்களின் சம்பளத் தொகை 15 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. தெலுங்கானாவில் மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு மூத்த மருத்துவர் கூட்டமைப்புடன் இணைந்து இளநிலை மருத்துவர்கள் பணியை புறக்கணிக்க முடிவு செய்தனர். மே 26-ஆம் தேதி கொரோனா தொடர்பான அனைத்து அவசர கால பிரிவுகளுக்கான சிகிச்சையை புறக்கணித்து, மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், நோயாளிகளின் நிலை ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனையடுத்து, மருத்துவர்களின் இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தை […]
தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள இரு இளைஞர்கள் வேகமாக வந்து இரும்பு செக்போஸ்டில் மோதியதில் ஒருவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மச்செரியால் மாவட்டத்தின் ஜன்னாராம் பகுதியை நோக்கி இரு இளைஞர்கள் அதிவேகமாக பைக்கில் சென்று கொண்டிருந்தனர். எனவே தபல்பூர் சோதனை சாவடியில் வனத்துறை அதிகாரிகள் தடுப்பு கேட்டை கீழே இறக்கி இரு சக்கர வாகனத்தை நிறுத்தும் படியாக கையசைத்துள்ளனர். ஆனால் அதிவேகமாக பைக் ஓட்டி வந்த இளைஞர்கள் காவலர்களின் கை அசைவுக்கு […]
தெலுங்கானா மாநிலத்தில் திருமணமாகிய ஐந்து நாளில் மயங்கி விழுந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளதால் மத்திய அரசு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் கடுமையான கட்டுப்பாடுகளும் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகரகர்நூல் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவாணி எனும் இளம் பெண்ணுக்கும் தண்டூர் எனும் பகுதியை சேர்ந்த நவீன் என்பவருக்கும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை […]
தெலுங்கானாவில் முக கவசம் அடிக்கடி வாங்க முடியாததால் பறவை கூட்டை முக கவசமாக அணிந்து ஓய்வூதிய தொகை வாங்க வந்த முதியவர். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை உருவாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. நாளுக்கு நாள் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதிலும் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை பின்பற்றி தூய்மையாக இருப்பதும் தான் கொரோனா தொற்றை […]
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, தெலுங்கானாவில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் இந்தியாவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் அம்மாநில அரசுகள், வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா […]
தெலுங்கானாவில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.1000 அபராதம். இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை தடுக்கும் வகையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை தடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் தெலுங்கானாவில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் மாஸ்க் […]
இங்கிலாந்தில் இருந்து தெலுங்கானா திரும்பிய ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.அந்த நபர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சி.எஸ்.ஐ.ஆர்-செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஏழுபேருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று புதிய பரிமாற்றம் அடைந்துள்ள வைரஸ் தான் காரணமா என கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் இங்கிலாந்தில் இருந்து தெலுங்கானாவுக்கு திரும்பிய 846 பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் காலங்களில் வாழ்வாதாரம் இழந்து தவித்த பலருக்கு உதவி செய்ததற்காக நடிகர் சோனு சூட் அவர்களுக்கு தெலுங்கானாவில் கோவில் கட்டப்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் விஜயகாந்தின் கள்ளழகர் எனும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, தற்பொழுது தெலுங்கு, தமிழ் ஆகிய திரை உலகில் பிரபலமான வில்லனாக நடித்து வருகிறவர் தான் சோனு சூத். கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு தங்களது இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு […]
நாடு முழுவதும் இன்று 10 மாநில சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெறும் முதன்முறையாக பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 2ம்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதே போல நாடு முழுவதும் 10 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி மத்திய பிரதேசம் 28 தொகுதிகளிலும், குஜராத் 8தொகுதிகளிலும் , உத்தர பிரதேசம்-7தொகுதிகளிலும், ஒடிசா, நாகலாந்து, கர்நாடகம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய […]
தெலுங்கானா வெள்ள நிவாரணத்துக்காக நடிகர் மகேஷ் பாபு ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார். இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால் மக்கள் அழிந்து வரக்கூடிய சூழ்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், பல்வேறு ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதுடன் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். எனவே, தெலுங்கானா […]
தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.15 கோடி நிதியுதவி வழங்கிய டெல்லி முதல்வர். பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தெலுங்கானாவை கனமழை புரட்டி எடுத்துள்ளது. கனமழையால் பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வெள்ளபாதிப்பில் இறந்தவர்களுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறனர். இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, பெரும் சேதத்தை சந்தித்துள்ள தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.15 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]
தெலுங்கானாவில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தால், 5 ஆயிரம் கோடிக்கும் மேல் சேதம். பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தெலுங்கானாவில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த வெள்ளத்தில் தலைநகரம் ஹைதராதாபாத் உட்பட, பல பகுதிகள் வெள்ளத்தில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இதனால், பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடி வெள்ளத்திற்கான உரிய உதவிகள் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், […]
மத்திய அரசின் முடிவுக்கு தமிழகம்,கேரளம் தெலுங்கானா,டெல்லி,சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் நடைபெற்றது.அப்போது, 2019-20 ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.1,65000 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், ரூ. 95,444 கோடி மட்டும் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய நிதித்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்திருந்தார். ரூ.3 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரூ.65,000 கோடியை செஸ் மூலம் ஈட்டினாலும், ரூ.2.35 லட்சம் கோடி […]