கேரளாவில் கனமழை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை ...!

Yellow alert issued for 11 districts in Kerala

கேரளாவில் கனமழை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு பச்சை நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நேற்றிரவு ஆந்திரா அருகே குலாப் புயல் கரையை கடந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக விழுந்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் தொடர்ச்சியாக கேரளாவில் மழை பெய்து வருவதால் காசர்க்கோடு, கன்னுர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், திரிசூர், பாலக்காடு, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தினம் திட்டா ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அப்பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.