2ஜி சேவையை இந்தியாவில் நிறுத்த கோரிய முகேஷ் அம்பானி கருத்துக்கு வோடபோன் நிறுவனம் எதிர்ப்பு!

Default Image

2ஜி சேவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற முகேஷ் அம்பானியின் கருத்துக்கு வோடபோன் ஐடியா இயக்குனர் ரவீந்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அண்மையில் கொடுத்த செய்தியில் உலகின் பல நாடுகள் 5ஜி சேவை வரை மாறியுள்ள நிலையில், நம் நாட்டில் இன்னமும் 30 கோடி பேர் 2 ஜி சேவையை பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் 2ஜி சேவையை நாட்டில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வோடபோன் ஐடியா மேலாண் இயக்குனர் ரவீந்தர் தக்கர், ஸ்மார்ட் போன்கள் இல்லாதவர்களுக்கு 2ஜி சேவை சிறப்பாக பயன்பட்டு வருவதாகவும், குறிப்பாக பெரியவர்கள் 2ஜி சேவையையே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்