கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதில் உ.பி முதலிடம் – முதல்வர் யோகி!

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has said that Uttar Pradesh is number one in corona testing and vaccination.

கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்திலும் இந்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் 100% முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், நாட்டிலேயே உத்தர பிரதேச மாநிலம் தான் கொரோனா தடுப்பூசி  செலுத்துவதிலும், பரிசோதனை செய்வதிலும் முதலிடத்தில் உள்ளது என கூறியுள்ளார்.