மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி ...!

In Maharashtra, two more cases of omaikran infection have been confirmed, bringing the number of cases to 10.

மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வந்த ஓமைக்ரான் கொரோனா தொற்று  தற்போது இந்தியாவிலும் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பலருக்கு இந்த ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே 8 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் இருவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.