ஒரிசாவில் உள்ள பூரி கடற்கரையில் ஸ்டீபன் ஹாக்கிங் உருவத்தை மணலில் சிற்பமாக செதுக்கி அஞ்சலி...!!

Tribute to StephenHawking, the man who understood the origin of universe. SandArt at Puri beach in odisha .

இயற்பியல் அறிவியலாளரும், பிரபல பேராசிரியருமான ஸ்டீபன் ஹாக்கிங் மரணமடைந்து இருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் குவாண்டம் அறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில் பல முக்கிய ஆய்வுகளைச் செய்தவர். பூமி உருவானது எப்படி என்பது குறித்து பலமுக்கிய ஆய்வுகளை நடத்தியவர். இவர் எழுதிய முக்கிய நூல்களில் ஒன்று அ பிரிப் ஹிஸ்டரி ஆப் டைம் (A Brief History of Time) ஆகும்.ஸ்டீபன் ஹாக்கிங் 76 வயதான அவர் , லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இந்நிலையில் இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரிசாவில் உள்ள பூரி கடற்கரையில் இந்தியாவின் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உலகப்புகழ் பெற்ற இயற்பியல் அறிவியலாளரும், பிரபல பேராசிரியருமான ஸ்டீபன் ஹாக்கிங் உருவத்தை மணலில் சிற்பமாக செதுக்கியுள்ளார்.

ஒரிசாவில் உள்ள பூரி கடற்கரையில் ஸ்டீபன் ஹாக்கிங் உருவத்தை மணலில் சிற்பமாக செதுக்கி அஞ்சலி...!!