பர்தா அணிந்து நகைக்கடைக்குள் நுழைந்த திருடர்கள்! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!
ஹைதராபாத் : பர்தா அணிந்த இரண்டு மர்ம நபர்கள் நகைக்கடையில் உரிமையாளரை கத்தியை வைத்து தாக்கிவிட்டு நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது.
ஹைதராபாத் மேட்சல் நகரம் ஜகதம்பாவில் இருக்கும் நகைக்கடைக்கு இன்று இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பர்தா அணிந்துகொண்டு நகை வாங்கவந்தது போல உள்ளே நுழைந்தனர். கடையில் உரிமையாளர் மற்றும் வேலை பார்க்கும் மற்றோரு நபர் ஒருவரும் இருந்தனர். அப்போது பர்தா அணிந்துகொண்டு வந்த அந்த இருவரும் உரிமையாளரிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
பிறகு திடீரென, இருவரில் ஒருவர் கையில் கொண்டு வந்த பெரிய கத்தி ஒன்றை எடுத்து கடையின் உரிமையாளரை மிரட்டி நகையை எடுத்து இந்த பைக்குள் போட்டு கொடு என்பது போல கேட்டுள்ளனர். அத்துடன் உரிமையாளரை கழுத்திற்கு பக்கத்தில் கத்தியை வைத்தும் குத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த உரிமையாளர் நகையை எடுத்துக்கோங்க என்பது போல பயத்தில் கூறியுள்ளார்.
ஒருவர் உரிமையாளரை மிரட்டி கொண்டு இருந்த நிலையில், மற்றோரு மர்ம நபர் நகையை தாங்கள் கொண்டு வந்த பைக்குள் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார். பின் உரிமையாளர் இருவரையும் தள்ளிவிட்டு வெளியே தப்பித்து ஓடினார். உடனடியாக அந்த பார்த்த அணிந்து வந்த திருடர்களும் வெளியே ஓடி தாங்கள் வந்த பைக்கில் நகையை எடுத்து கொண்டு சென்றார்கள்.
அப்போது ஆத்திரத்துடன் கடையில் வேலை பார்த்து கொண்டு இருந்த அந்த நபர் கடையில் இருந்து சேரை எடுத்து அந்த நபர்களை தாக்கினார். கடையின் உரிமையாளரும் பைக்கில் சென்ற அவர்களை தொடர்ந்து சேரை எடுத்து தூக்கி எறிந்தார்.இருப்பினும், திருடிய அந்த மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்றார்கள். இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
సీసీటీవీ ఫుటేజ్.. బుర్కా వేసుకొచ్చి బంగారం షాపు యజమానిపై కత్తితో దాడి చేసిన దుండగులు
హైదరాబాద్ – మేడ్చల్ పట్టణంలోని
జగదాంబ బంగారం షాపుకు ఇద్దరు దుండగులు బుర్కా వేసుకుని వచ్చి.. కత్తితో షాపు యజమాని మెడ కింద పొడిచి బంగారం ఎత్తుకెళ్లారు.ఈ ఘటనపై పోలీసులు కేసు నమోదు చేసి దుండగుల… pic.twitter.com/I8Hj80ntFZ
— Telugu Scribe (@TeluguScribe) June 20, 2024
— Telugu Scribe (@TeluguScribe) June 20, 2024