ஹிமாச்சலப்பிரதேச முதலமைச்சரின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த எஸ்.பி.
ஹிமாச்சலப்பிரதேசம் குலு மாவட்டத்திற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வருகை புரிந்துள்ளார். அதன் காரணத்தால் அவரை வரவேற்க ஹிமாச்சலப்பிரதேசம் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் காரில் வந்து இறங்கியுள்ளார். அப்போது முதலமைச்சரின் பாதுகாவலருக்கும் குலு மாவட்ட எஸ்.பிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
குலு மாவட்ட எஸ்.பி. கௌரவ் சிங் முதலமைச்சரின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்துள்ளார். அதற்கு பதிலுக்கு பாதுகாவலரும் எஸ்.பியை காலால் எட்டி உதைத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
unknown node