தொடர்ந்து உச்சத்தை தொடும் பங்குசந்தை.. சென்செக்ஸ் 518 புள்ளிகள் உயர்வு!

While Asian markets have also seen ups and downs, Indian markets are once again at an all-time high today.

ஆசிய சந்தைகளும் ஏற்ற, இறக்கத்தில் காணப்பட்ட நிலையில், இந்திய சந்தைகள் இன்று மீண்டும் வரலாற்றில் உச்சத்தை எட்டியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 518.22 (0.88%) புள்ளிகள் உயர்ந்து, 59,659.38 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 141.55 (0.80%) புள்ளிகள் உயர்ந்து, 17,771.05 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

டாடா ஸ்டீல் நிறுவனம் எதிர்பார்க்காத வகையில் 3.22 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. பஜாஜ் பின்சர்வ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களும் இன்று அதிகப்படியாக 3.5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு தொடர்ந்து லாபத்தினை கொடுத்து வருகின்றது. உலகளாவிய சந்தையானது சற்று சரிவில் இருந்தாலும், ஆசிய சந்தைகளும் ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட நிலையில், இந்திய சந்தைகள் இன்று மீண்டும் வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.

இதனிடையே, ஏற்றத்துடன் தொடங்கிய ப்ரீ ஓபனிங் சந்தையில் தொடக்கத்திலும் சென்செக்ஸ் 281.23 புள்ளிகள் அதிகரித்து, 59,422.39 புள்ளிகளாகவும், நிஃப்டி 79.70 புள்ளிகள் அதிகரித்து, 17,709.20 புள்ளிகளாகவும் இருந்தது. இம்மாத இறுதிக்குள் 60,000 புள்ளிகளை தொடலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.