இந்த ஆண்டு பயங்கரவாத இயக்கத்தில் சேருபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம்... டிஜிபி தில்பாக் சிங்..!

According to Jammu and Kashmir DGP Dilbak, the number of people joining the terror movement this year is slightly higher than in 2019.

ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இந்த ஆண்டு பயங்கரவாத இயக்கத்தில் சேருபவர்களின் எண்ணிக்கை 2019-ஐ விட சற்றே அதிகமாக உள்ளது. இதில், சந்தோஷமான விஷயம் என்னவென்றால், அவர்களில் 70% பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கைது செய்யப்பட்டனர் எனதெரிவித்தார்.

2018-19 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 44 அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர், அதன் எண்ணிக்கை தற்போது 38 ஆக உள்ளது. பாகிஸ்தானின் உத்தரவின் பேரில் பயங்கரவாதிகள் இன்னும் பொதுமக்களை குறிவைத்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் இந்த ஆண்டு பயங்கரவாதிகள் ஊடுருவல் மிகக் குறைவு. எனவே, பயங்கரவாதிகள் உள்ளூர் ஆட்களை நம்ப வேண்டியிருந்தது. அதனால், அவர்கள் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் பணத்தை ட்ரோன்கள் மூலம் பெற முயன்றனர், அவைகளில் பெரும்பாலும் தோல்வியடைந்தனர் என டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்தார்.