ஜம்மு-காஷ்மீர்: நேற்று நள்ளிரவு ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒருவர் பலியானதுடன், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரின் உள்ள ரியாசி மாவட்டத்தில் ஷிவ் கோரி எனும் குகைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒரு பேருந்து மீது பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் அதில் அந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 9 பக்தர்கள் உயிரிழந்த நிலையில் 33 பேர் படுகாயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். […]
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக ஃபரூக் அப்துல்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் ( National Conference President) தலைவராக ஃபரூக் அப்துல்லா இன்று மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பரூக் அப்துல்லா அறிவித்த நிலையில், மீண்டும் தேர்வாகியுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரை பரூக் அப்துல்லாவிற்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் தேர்வாகியுள்ளார். பரூக் அப்துல்லாவுக்கு ஆதரவாக […]
புதிய கட்சியை தொடங்கினார் காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய குலாம் நபி ஆசாத், “ஜனநாயக ஆசாத் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். ஜம்முவில், குலாம் நபி ஆசாத் தனது புதிய ஜனநாயக ஆசாத் கட்சியின் கொடியையும் வெளியிட்டார். கடுகு நிறம் (Mustard colour) படைப்பாற்றல் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையையும், வெள்ளை அமைதியையும், நீலம் நிறம் சுதந்திரம், திறந்தவெளி, கற்பனை மற்றும் […]
ஜம்மு காஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயம். ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் நகரின் சாவ்ஜியன் பகுதியில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து பகுதிக்கு விரைந்த ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் […]
ராணுவ முகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலியல் தமிழக வீரர் லஷ்மணன் வீர மரணம். ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், […]
ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு […]
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள ராஜோரி மாவட்டம் தனமண்டி என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் தனமண்டி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை அடுத்து பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு […]
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 120 வயதுடைய மூதாட்டி ஒருவர் தற்பொழுது தனக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்து கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தினை சேர்ந்த தோலி தேவி எனும் 120 வயதுடைய மூதாட்டி ஒருவர் தனக்கான தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்டுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், இளைஞர்கள் பலர் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டு […]
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அவந்திபோராவின் நாக்பேரான் ட்ராலின் வனப்பகுதியில் இன்று என்கவுண்டர் நடந்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 3 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் ஒருவர், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அடையாளம் தெரியாத […]
ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் பகுதியில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஹென்சார் கிராமத்தில் நேற்று அதிகாலை திடீரென கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு மேகமூட்டமாக காணப்பட்டதால், வெள்ளத்தில் 40க்கு மேற்பட்ட மக்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தில் 6 பேர் உயிரிழந்து, சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த கிராமத்திற்கு […]
ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இந்நிலையில், இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையரை தொடர்பாக விவாதிக்கப்படும் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நிஇந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காஷ்மீர் அரசியல் கட்சிகளை […]
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பாகிஸ்தானியர். உடனடியாக கண்டறிந்து கைதுசெய்த எல்லை பாதுகாப்பு படையினர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு வழக்கமாக இந்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென அத்துமீறி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஒரு பாகிஸ்தான் நபர் இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டுள்ளனர். ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதால் உடனடியாக எச்சரிக்கையுடன் செயல்பட்ட பாதுகாப்பு […]
ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இந்த ஆண்டு பயங்கரவாத இயக்கத்தில் சேருபவர்களின் எண்ணிக்கை 2019-ஐ விட சற்றே அதிகமாக உள்ளது. இதில், சந்தோஷமான விஷயம் என்னவென்றால், அவர்களில் 70% பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கைது செய்யப்பட்டனர் எனதெரிவித்தார். 2018-19 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 44 அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர், அதன் எண்ணிக்கை தற்போது 38 ஆக உள்ளது. பாகிஸ்தானின் […]
ஜம்மு-காஷ்மீரில் இன்று ரிக்டர் அளவுகோலில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கவியல் தேசிய மையத்தின்படி, மாலை 06:56 மணிக்கு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவொரு உயிர் இழப்பு அல்லது பொருட் சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படையினரால் இந்தாண்டு 200 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த சில தினங்களாக ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வரும் நிலையில், நேற்றைய தினம் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகளுடன் இணைந்து ஸ்ரீநகர் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில், சயிஃபுல்லா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவன் சுட்டு கொல்லப்பட்டதாக கூறிய டிஜிபி தில்பக் சிங், இந்த ஆண்டில் அக்டோபர் […]
மெகபூபா முஃப்தி 14 மாதங்களுக்குப் பிறகு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. எனவே, அசம்பாவிதச் சம்பவங்களை தவிர்ப்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,அங்குள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்ய்யப்பட்டு அதன் பிறகு, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அந்தவகையில் ஜம்மு&காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முஃப்தியும் […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சிர்ஹாமா பகுதியில் என்கவுண்டர் தொடங்கப்பட்டுள்ளது எனவும் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர் என ஜம்முகாஷ்மீர் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள அவந்திபோராவின் மகாமா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #Encounter has started at #Sirhama area of #Anantnag. Police and security forces are on the job. Further details shall follow. […]
இடைநீக்கம் செய்யப்பட்ட துணை கண்காணிப்பாளர் போலீஸ் (டிஎஸ்பி) டேவிந்தர் சிங் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போராளி நவீத் பாபு ஆகியோரின் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் இன்று சோதனைகளை நடத்தியது. பரமுல்லா மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், குறைந்தது நான்கு வீடுகள் மற்றும் ஒரு அரசாங்க குடியிருப்பில் பல மணி நேரம் சோதனைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பல்ஹல்லன் பட்டனில் உள்ள குலாம் ரசூல் வாசா, கனிஸ்போரா […]
ஜம்மு-காஷ்மீரின் புத்கம் மாவட்டத்தில் உள்ள காவுசா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அங்கு காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால், பல பகுதிகளில் இருந்து காஷ்மீருக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந் நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மத்திய ரிசர்வ் படையினர், எல்லை பாதுகாப்பு […]