மகாராஷ்டிராவில் முதல் ஜிகா வைரஸ் தொற்று..!
மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பெல்சர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று சுகாதாரத்துறை தெரிவித்தது. 50 வயதாகும் இந்த பெண்ணிற்கு ஜிகா வைரஸ் தாக்குதலோடு சிக்குன்குன்யா பாதிப்பிற்கும் உள்ளாகி இருக்கிறார்.
மேலும், இவர் இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளதால் மற்றவர்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாதிப்படைந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நேற்று அரசு மருத்துவக்குழுவினர் பெல்சர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்குள்ள கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் இது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூறியுள்ளனர்.