2022இல் அதிக நாய்கடிகளை வாங்கிய மாநிலம்.! இரண்டாம் இடத்தில் தமிழகம்.! முதல் இடம்.?

அதிக நாய்கடிகளை வாங்கிய மாநிலத்தின் லிஸ்ட்டில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளது. தெருநாய்களின் தொல்லை இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் அதிகமாக இருக்கிறது. இரவில் தனியாக செல்வோருக்கு பல சமயம் தொந்தரவாகவும், பயமுறுத்தும் வண்ணமும் இருக்கிறது. இப்படி இந்த 2022ஆம் ஆண்டு அதிக நாய்கடிகளை வாங்கிய மாநிலத்தின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில், முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு  3,46,318 மருத்துவ வழக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டாம் இடத்தில் 3,30,264 மருத்துவ வழக்குகளுடன் தமிழகம் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் … Read more

கேரளா முதலிடம்.! தமிழகத்திற்கு..? எத்தனை கோடி பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளார்கள் தெரியுமா.?

அதிக எண்ணிக்கையில் பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது.  தற்போது வெளிநாடு சென்று வேலை பார்க்கும் ஆர்வமும், வெளியூர் சுற்றுலா செல்லும் ஆர்வமும் அதிகமாகி வருவதால் பாஸ்போர்ட் எடுக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதற்கு வசதியாக பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்க்கும் மையங்களும் அதிகரித்து உள்ளன. தற்போது பாஸ்போர்ட் பெற்றவர்கள் எண்ணிக்கையை மத்திய அரசு மாநில அளவிலான எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அதில், அதிக எண்ணிக்கையில், கேரளா 1.12 கோடி நபர்களை தாண்டி முதலிடத்தில் … Read more

சாவர்க்கரின் மன்னிப்பு கடித விவகாரம்.! ராகுல் காந்தி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.!

சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் கொடுத்ததாக ராகுல் காந்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிராவில் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று காங்கிரஸ் கூட்டத்தில் அவர் பேசுகையில், அந்தமான் சிறையில் சாவர்க்கர் இருந்தபோது ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார் என ஓர் கடிதத்தை காண்பித்தார். சாவர்க்கர் … Read more

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து சிறுமி குதிக்கும் வைரல் வீடியோ.!

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து சிறுமி குதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஓடும் ஆட்டோவில் இருந்து சிறுமி குதித்துள்ளார், ஆட்டோ ஓட்டுநர் தன்னிடம் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதால், தற்காத்துக் கொள்ள ஓடும் வாகனத்திலிருந்து வெளியில் குதித்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் சையத் அக்பர் ஹமீது, கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், தலையில் காயம் அடைந்த பாதிக்கப்பட்ட சிறுமி, இங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். … Read more

அரசு ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி.! தீபாவளி போனஸை அறிவித்தார் மகாராஷ்டிரா முதல்வர்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.  மஹாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்தார் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.  மகாராஷ்டிரா மாநில முனிசிபல் கார்பரேஷன் ஊழியர்கள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பு அரசு ஊழியர்களுக்கு இந்த போனஸை அறிவித்துள்ளார். அவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சுமார் 93,000 பேருக்கும், ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் … Read more

#BREAKING : விநாயகர் சிலை கரைப்பின் போது பரிதாபம்.! நீரில் மூழ்கி, மின்தாக்கி 20 பேர் பலி.!

மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டபோது மொத்தமாக பல்வேறு இடங்களில் 20 உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மாநில அரசு சார்பில் தெரிவித்துளளது.  விநாயகர் சதுர்த்தி கடந்த மாதம் (ஆகஸ்ட்) 31ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் விநாயகர் சிலை பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப்படும். அவ்வாறு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட நாட்களில் நீர்நிலைகளில் கரைக்கப்படும். அப்படி கரைக்கப்படும் போது நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் அசம்பாவிதங்கள் … Read more

மஹாராஷ்டிராவில் புதிய அமைச்சரவை… புதிய முதல்வர்.. 18 அமைச்சர்கள் பதவியேற்பு.!

மஹாராஷ்டிராவில் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேதலைமையில் 18 எம்.எல்.ஏக்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். மஹாராஷ்டிராவில் தற்போது ஏகப்பட்ட அரசியல் அதிரடி நகர்வுகள் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடைபெற்று சற்று ஓய்ந்துள்ளது என்றே கூறவேண்டும். சிவ சேனா கட்சி இரண்டாக பிரிந்து இதற்கு முன்னர் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே மற்றும், ஏக்நாத் ஷிண்டே என அணிகளாக மாறியது. இதில் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன், பாஜக எம்.எல்.ஏக்களுடன் கூட்டணி அமைந்து மஹாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினார். மஹாராஷ்டிரா புதிய … Read more

ஓபிசி பிரிவுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு… உச்சநீதிமன்றம் தீர்ப்பு.. தேர்தல் வேலைகள் தீவிரம்..

மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் இடஒதுக்கீடு சம்பந்தமாக எழுந்த பிரச்சனை உச்சநீதிமன்றம் வரை சென்றது. இந்த விவகாரத்தில், தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஓபிசி பிரிவினருக்கு உள்ளாட்சி தேர்தலில் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி தீர்ப்பளித்தது. இதனை மஹராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே  மற்றும் துணை முதல்வர் தேவேந்திர … Read more

மஹாராஷ்டிராவில் காருடன் தீவைத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற குடும்பம்

நிதி நெருக்கடி காரணமாக தந்தை, தாய் மற்றும் மகன் தற்கொலை முயற்சி உயிர்பிழைத்த-தாய் மற்றும் மகன். மஹாராஷ்டிரா: நேற்று(ஜூலை19) நாக்பூரில் 58 வயது நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் மகன் மூவரும் காரில் இருந்தபோது தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.இச்சம்பவத்தில் அந்த நபர் உயிரிழந்துவிட்டார். அவரின் மனைவி(55) மற்றும் மகன்(30) பலத்த தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த நபரின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட தற்கொலைக் கடிதத்தில், நிதி நெருக்கடி காரணமாக அவர் … Read more

#Viral video: அறிய சூறாவளி காற்றால் விவசாய நிலங்கள் சேதம்

மத்தியப் பிரதேசத்தில் அரிய சூறாவளியால் விவசாய நிலங்கள் நாசம். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் ஒரு அரிய சூறாவளி விவசாய நிலத்தை நாசம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல். “இயற்கை எல்லாவற்றையும் ஒரு நொடியில் அழித்துவிடும்” என்று ஒரு சமூக ஊடக பயனர் வீடியோவில் கருத்து தெரிவித்துள்ளார். “இது பயமாக இருக்கிறது” என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.   View this post on Instagram   A post shared by Hindustan Times (@hindustantimes)