நாளை மறுநாள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!
நாளை மறுநாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என அச்சம்.
வங்கி ஊழியர்கள் நாளை மறுநாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. அதாவது, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) நவம்பர் 19-ம் தேதி சனிக்கிழமை வங்கி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. ஊழியர்கள் இடமாற்றம் தொடர்பாக விதிமுறைகள் பின்பற்றவில்லை என குற்றசாட்டியுள்ளனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தத்திற்கு யுனைடெட் ஃபோரம் ஆதரவு தெரிவித்துள்ளது.