நாளை மறுநாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என அச்சம். வங்கி ஊழியர்கள் நாளை மறுநாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. அதாவது, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) நவம்பர் 19-ம் தேதி சனிக்கிழமை வங்கி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. ஊழியர்கள் இடமாற்றம் தொடர்பாக […]
அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மன்றம் அழைப்பு விடுத்துள்ள 2 நாள் பாரத் பந்த் (நாடு தழுவிய வேலைநிறுத்தம்) திங்களன்று வங்கி சேவைகளை பாதித்துள்ளது.நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வங்கி ஊழியர்களில் ஒரு பகுதியினர் பணிக்கு வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC), இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மற்றும் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) போன்றவை தொழிலாளர் சட்டங்களில் முன்மொழியப்பட்ட மாற்றங்களையும் தனியார்மயமாக்கலையும் […]