Rameshwaram Cafe: பெங்களூருவின் ராமேஸ்வரம் கஃபே உணவகம் குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபர் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தற்போது பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகம் பிரபலமானது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சாப்பிடுகின்றனர்.
Read More –குண்டுவெடிப்பு சம்பவம்… பலத்த பாதுகாப்புடன் இன்று மீண்டும் திறந்த ராமேஸ்வரம் கஃபே!
இங்கு கடந்த 1ஆம் தேதி பிற்பகலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் உணவகப் பணியாளர்கள் 2 பேர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு, இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை விசாரிக்கும் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More –நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை! பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம் வழங்கும் ஆதி திராவிடர் நலத்துறை
விபத்து நடந்த உணவகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டு, அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்தேக நபர், மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Read More –ஆந்திர அரசியல் அதிரடி.! சந்திரபாபு நாயுடு – பவன் கல்யாண் – பாஜக மெகா கூட்டணி.!
அதன்படி அவர் பேருந்தில் கர்நாடகாவின் பல்லாரிக்கு பயணித்து, பின்னர் பட்கல், கோகர்ணா, பெல்காம் மற்றும் கோலாப்பூர் வழியாக புனேவுக்குச் சென்றதாக வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, இருப்பினும், பயங்கரவாதி என கூறப்படும் சந்தேக நபர் புனேவை அடைந்தாரா அல்லது வழியில் பேருந்துகளை மாற்றி வேறு ஊர்களுக்கு சென்றாரா என்பது குறித்த தகவல்களை என்.ஐ.ஏ. இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
