புனே : மகாராஷ்டிர மாநிலத்தில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. புனே அருகேவுள்ள பவதான் பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இன்று காலை 6:45 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் உடல் கருகி பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த மூன்று பேரில் இரண்டு விமானிகள் மற்றும் ஒரு பொறியாளர் என தெரிய வந்துள்ளது. ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பிடித்து எரிந்து உருக்குலைந்தது. சம்பவ இடத்தில் 2 ஆம்புலன்ஸ்கள், 4 தீயணைப்பு வண்டிகள் […]
புனே : புனேவில் உள்ள பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) என்ற நிறுவனத்தில் 26 வயது உடைய அன்னா செபாஸ்டியன் பணியாற்றி வந்துள்ளார். இவர் தற்போது அந்நிறுவனத்தில் ஏற்பட்ட பணிச்சுமையால் உயிரிழந்ததாக அவரது தாய் கூறியுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக பட்டய கணக்காளராக (Chartered Accountant) EY நிறுவனத்தில் அன்னா பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த நிறுவனம் மூலம் ஏற்பட்ட பணிச்சுமை காரணமாக தற்போது அவர் உயிரிழந்து இருக்கிறார். அதனை தொடர்ந்து, […]
மகாராஷ்டிரா : மும்பையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், ஆற்றுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர். மும்பையில் இருந்து ஐதராபாத் சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமானது. இதில், பலி எதுவும் ஏற்படவில்லை. படுகாயத்துடன் மீட்கப்பட்ட 4 பேர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவரின் நிலை […]
ஜிகா வைரஸ் : மகாராஷ்டிராவின் புனேவில் இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 6 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டனர். தற்போது, ஜிகா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அதன் வேகத்தை புரிந்து கொண்டு மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களில் ஜிகா வைரஸ் கருவில் மைக்ரோசெபாலியை (அசாதாரண மூளை வளர்ச்சியால் குறிப்பிடத்தக்க அளவு சிறியதாக இருக்கும் நிலை) ஏற்படுத்துகிறது. டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்த்தொற்றுகளை பரப்பும் ஏடிஸ் […]
மகாராஷ்டிரா : புனேவில் ஏடிஎஸ் கொசு மூலம் பரவும் ஜிகா வைரசால், மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 2 கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து புனேவில் அந்த வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு நடத்தி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது […]
மகாராஷ்டிரா : புனேயில் ஸ்வப்னில் தாவ்டே என்ற இளைஞர், தனது ஜிம்மில் இருந்து 32 பேர் கொண்ட குழுவுடன், கடந்த சனிக்கிழமையன்று மும்பைக்கு மிக அருகில் உள்ள தம்ஹினி காட்டில் உள்ள நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அங்கு நீர்வீழ்ச்சியில் குதித்த ஸ்வப்னில் தாவ்டே, பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார் உடனடியாக தேடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் காணவில்லை. இதற்கு முன்னதாக, ஐந்து குடும்ப உறுப்பினர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. அந்த நபரின் 10 வயது […]
புனே : விலங்குகள் செய்யும் விஷயங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து நம்மளை ஆச்சரியப்படுத்திவிடும். அப்படி தான், புனே நகரின் பரபரப்பான போக்குவரத்தில் மாடு ஒன்று செய்த செயல் நெகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவில் ” புனே நகரில் போக்குவரத்தில் சிக்னல் போடப்பட்டு பலரும் தகளுடடைய வாகனத்தை நிறுத்துக்கொண்டு சிக்னலுக்காக காத்திருந்தார்கள். அப்போது அவர்களுடன் மாடு ஒன்றும் சிக்னல் போட்டு அனைவரும் […]
புனே : கடந்த மே 19ம் தேதி புனேயில் உள்ள பிரபல கட்டிடத் தொழிலாளியின் 17 வயது மகன், குடிபோதையில் போர்ச் டெய்கான் காரை ஓட்டியதாகவும், கல்யாணி நகர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதிய சம்பவவத்தில் இருவர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இவ்வழக்கில், சிறார் சிறையில் அடைக்கப்பட்ட 17 வயது சிறுவனுக்கு பிணை வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அந்நபர் உட்பட குடும்பமே சிறை தண்டனை அனுபவிக்கும் நிலையில், சாட்சியங்களை […]
புனே கார் விபத்து : புனே போர்ஷே கார் விபத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவன் வேதாந்த்தின் தாத்தா சுரேந்திரா அகர்வால் கைது செய்யப்பட்டார். புனேவில் அமைந்துள்ள கல்யாணிநகர் அருகே கடந்த 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பிரபல கட்டிடத் தொழிலாளியின் மகனான 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற போர்ஷே கார், எதிரே வந்த சிறு வாகனம் மீது மோதியதில் இரண்டு இளம் மென்பொருள் பொறியாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு […]
சென்னை: புனே விபத்தில் 17 வயது சிறுவன் விடுவிக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி இன்று ஹரியானாவில் கடுமையாக விமர்சனம் செய்தார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ‘போர்ஷே டேகான்’ எனும் சொகுசு காரை அதிக வேகத்தில் ஒட்டி வந்த 17 வயது சிறுவன் , சாலையில் இருச்சக்கரத்தில் சென்று கொண்டு இருந்த தம்பதியை இடித்து ஏற்படுத்திய விபத்தில் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு பின்னர் அக்கம் பக்கத்தினரே சிறுவனை பிடித்து போலீசில் […]
Rameshwaram Cafe: பெங்களூருவின் ராமேஸ்வரம் கஃபே உணவகம் குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபர் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தற்போது பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகம் பிரபலமானது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சாப்பிடுகின்றனர். Read More – குண்டுவெடிப்பு சம்பவம்… பலத்த பாதுகாப்புடன் இன்று மீண்டும் திறந்த ராமேஸ்வரம் கஃபே! இங்கு கடந்த 1ஆம் தேதி பிற்பகலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் உணவகப் பணியாளர்கள் 2 பேர் […]
புனேவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 6 பேர் கைது. புனேவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக 6 பேரை புனே நகர போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறையின் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஆரம்பத்தில் அந்த சிறுமியை கத்தி முனையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தி புகைப்படங்களை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 6 பேரும் அந்த புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை […]
புனேவில் என்ஐஏ சோதனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கமிட்டதால் 40 பேர் கைது. பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரின் அடிப்படையில், கடந்த சில தினங்களாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய அலுவலகம், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிரடி சோதனை ஈடுபட்டது. இந்த சோதனையின்போது 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிஎப்ஐ நிர்வாகிகள் 106 பேரை என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை […]
புனேயில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதியதில் ஒருவர் பலி, 4 பேர் காயம். ஞாயிற்றுக்கிழமை(செப் 18) இரவு சாஸ்வத் சாலையில் மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்எஸ்ஆர்டிசி) ஷிவ்ஷாஹி பேருந்து கண்டெய்னர் டிரக் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். பஸ் பந்தர்பூரில் இருந்து புனே ஸ்வர்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. விபத்தில் சிக்கிய இரு வாகனங்களும் கிரேன்கள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புனேவில் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழாவிற்க்காக 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை நடைபெற இருக்கும் விநாயக சதுர்த்தியின் கடைசிநாளான விநாயகப் பெருமானின் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்விற்காக புனே முழுவதும் சுமார் 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா தலைமையில் இந்தப் பாதுகாப்புப் பணி நடைபெறும் எனவும், போக்குவரத்து மற்றும் ஊர்வலங்களை கட்டுப்படுத்த போக்குவரத்து கட்டுப்பாட்டு கிளையின் முழு ஊழியர்களும் சாலைகளில் பாதுகாப்பு பணிக்காக இருப்பார்கள் […]
புனேயில் சொத்துக்காக பாட்டியைக் கொன்று உடல் உறுப்புகளை ஆற்றில் வீசிய பேரன். புனேயில் சொத்து தகராறு காரணமாக குட்டு கெய்க்வாட் (20) என்பவர் தனது 62 வயது பாட்டியைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாக போலீஸார் நேற்று(செப் 6) தெரிவித்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட குட்டு கெய்க்வாட், தனது தந்தையுடன் சேர்ந்து இந்த கொலைக்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. போலீஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் வீடு மற்றும் சில தங்க ஆபரணங்களை தனது பேரனுக்கு […]
புனேவின் இந்தாபூரில் பயிற்சி விமானம் ஓன்று விபத்துக்குள்ளானது. அதிலிருந்த விமானிக்கு சிறு காயங்கள். மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் தாலுகாவில் இன்று(ஜூலை 25) காலை பயிற்சி விமானம் ஓன்று விபத்துக்குள்ளானதில் 22 வயது பெண் விமானிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த விமானத்தில் இருந்த பயிற்சி விமானி பவிகா ரத்தோட் (22), முதலுதவி அளிக்கப்பட்டு, ஷெல்கான் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடுள்ளார். இந்த விமானம் பாராமதி மாவட்டத்தில் உள்ள […]
கடந்த இரண்டு வாரங்களில், புனேவில் டெங்கு காய்ச்சலில் 50 பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, ஜனவரி முதல் புனே மாநகராட்சியின் சுகாதாரத் துறையால் 200 பேருக்கு டெங்கு மற்றும் 72 பேருக்கு சிக்குன்குனியா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால், காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட நோய்கள், நகரம் முழுவதும் பரவி வருகின்றன. டெங்குவால் இதுவரையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜனவரி முதல் ஜூலை வரை நடந்த ஆய்வக சோதனைகள் 193 நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. […]
புனேவில் 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஜூலையில் பெரும்பாலான நாட்களில் பலத்த மழைக்கு மத்தியில், புனேவில் ஜூலை 3 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் 30 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது 2012 க்குப் பிறகு ஜூலை மாதத்தில் பதிவான மிகக் குளிரான அதிகபட்ச வெப்பநிலையாகும். ஜூலை 1966 இல் அதிகபட்ச அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது.
புனேவில், வங்கி வேலை வாங்கி தருவதாக கூறி 22 வயது இளம் பெண்ணை ஒரு கும்பல் ஏமாற்றி 1 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரில் அண்மையில் ஒரு ஆன்லைன் மோசடியில் ஒரு இளம் பெண் சிக்கியுள்ளார். அவரிடம் ஒரு மர்ம கும்பல் இணைய வாயிலாக ஏமாற்றியுள்ளது. அதாவது, அந்த கும்பம் இளம் பெண்ணிடம் , உங்களுக்கு வங்கி வேலை வாங்கி தருகிறோம் என கூறி, அதற்காக சில ஆவணங்களும், மேலும் கொஞ்சம் […]