மாமியாரை கரம் பிடித்த மருமகன்… பீகாரில் வினோத சம்பவம்.!

Marries Mother In Law: பீகார் மாநிலம் பாங்காவில் இருந்து வந்த ஒரு அதிர்ச்சிகரமான செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே ஏற்பட்ட காதல் கதை கடைசியில் திருமணமாக முடிந்துள்ளது. இந்த சம்பவம் பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தையும் தாண்டி பரவ தொடங்கியது. இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்த பலரும், எப்படி இப்படியொரு நிலை உருவாகும் என்று யோசித்து சமூக வலைதளங்ளில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பீகாரை சேர்ந்த சிக்கந்தர் யாதவின் மனைவி, சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்திருக்கிறார். அவரது மனைவி இறந்த பிறகு, சிக்கந்தர் தனது மாமியார் வீட்டில் வசிக்கத் தொடங்கினார். அந்த சமயத்தில், மாமியார் மற்றும் மருமகன் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வலையில் விழுந்துள்ளனர்.
இந்த காதல் நாளடைவில் பெரியதாக வளர, நெருக்கமாக பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த காதல் விவகாரம் மாமனாருக்கு தெரிய வந்துள்ளது. இருவரும் நெருக்கமாக இருப்பதை அறிந்ததும், மாமனார் ஊர் பஞ்சாயத்தை கூட்டி உள்ளார்.
இந்நிலையில், ஊர் பஞ்சாயத்தில் வைத்து மாமியார் மீதான காதலையும் தாங்கள் நெருக்கமாக இருந்ததையும் அனைவரது முன்னிலையில் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, ஊர் பஞ்சாயத்தும் இதற்கு சம்மதம் தெரிவித்து. அவரது மாமனார் தலைமையில், மாமியார் மற்றும் மருமகன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
बिहार, में सास-दामाद ने गांव वालों के सामने रचाई शादी, दामाद और सास का कई सालों से चल रहा था अफेयर, अब यही देखना रह गया था #AbkiBaar400Paar #Election2024 #GTvsRCB #TakeItLightly #viralvideo #LokSabhaPolls #TejRanFam #INFOSYS pic.twitter.com/YGKl7P8pQj
— Priya halchal (@HalchalPriya) April 28, 2024