ராஜீவ் காந்தி பெயரில் அறிவியல் நகரம் கட்டப்படும் – மகாராஷ்டிரா அரசு!

The Maharashtra government has announced that a world-class science city will be built in Rajiv Gandhi's name.

ராஜீவ் காந்தி பெயரில் உலக தரம் வாய்ந்த அறிவியல் நகரம் கட்டப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் புனேவில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் நகரம் கட்டப்படும் என மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புனேவின் பிம்ப்ரி சிஞ்ச்வாட்  பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் கண்டுபிடிப்பு நகரம் கட்டப்பட உள்ளது.

இந்த அறிவியல் நகரத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயர் சூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவியல் நகரம் 190 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.