7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு.!
- காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் இன்று திறக்கப்படும் என மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
காஷ்மீருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு, காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதன் காரணமாக தொலைத்தொடர்பு மற்றும் இணையதள சேவைகள் செயல்படாமல் இருந்து வந்தது. மேலும் முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கு காலவரையின்றி மூடப்பட்டன.
இதையடுத்து பள்ளிகளை திறக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், பாதுகாப்பு காரணங்களுக்காக குழந்தைகளை அனுப்ப பெற்றோர் முன்வரவில்லை. இந்த நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் பள்ளிகள் இன்று முதல் இயங்கும் என்று மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் குழந்தைகள் கல்வி நலன் கருதி அனைத்து தரப்பினரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மாநில கல்வித்துறை இயக்குனர் முகம்மது யானுஷ் மாலிக் கோரிக்கை விடுத்துள்ளார்.