தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத்தொடங்கிய நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் விருப்பத்தை அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிக்கையாக இன்று சமர்பிக்கவுள்ளது. தமிழகத்தில் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனாவின் தாக்கம் சற்று குறையத்தொடங்கிய நிலையில், கடந்த நவம்பர் மாதம் பெற்றோர்களிடம் பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால், பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து, […]
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்டு, சுத்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் போக்குவரத்து என அனைத்துமே தடை செய்யப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என்பதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு சுத்தம் செய்யக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. எட்டாம் தேதி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 10, 12, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு அப்பள்ளிகள் நடைபெறும் […]
10 -ம் வகுப்பு மாணவர்களை போல, தனித்தேர்வர்களையும் தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வரும் நிலையில், பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பரவிவரும் சூழலில், அக். […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அதாவது ஊரடங்கு 5.0 அமலில் உள்ளது. இதில் பல துறையினருக்கும் தளர்வு அளிக்கப்பட்டது. இந்த தளர்வுகள் பள்ளிகள் திறப்பதற்கும் பொருந்தும். இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கவுள்ளதாக தெரிவித்தனர். […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இப்போதைக்கு சாத்தியம் இல்லை என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பொதுதேர்வுகள் முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவித்தார். மேலும், ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதுபற்றி எந்த குழப்பமும் வேண்டாம் என கூறிய அவர், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இப்போதைக்கு சாத்தியமே இல்லை […]
காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் இன்று திறக்கப்படும் என மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. காஷ்மீருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு, காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதன் காரணமாக தொலைத்தொடர்பு மற்றும் இணையதள சேவைகள் செயல்படாமல் இருந்து வந்தது. மேலும் முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கு காலவரையின்றி மூடப்பட்டன. இதையடுத்து பள்ளிகளை […]