RBI அறிவுறுத்தலின் படி வட்டியை குறைத்தது SBI

Default Image

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் பெரும்பாலான நாடுகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமால் இருக்கின்றனர். நம் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நம்நாட்டில் பெரும் பொருளாதார மந்த நிலை உருவாகும் நிலை உண்டாகியுள்ளது. 

வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ  வட்டி விகிதம் 5.15 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும்,  இதனால் வீட்டு கடன், வாகன கடன் போன்றவைகளுக்கு கடன்வட்டி குறைய வாய்ப்புள்ளது என்று   ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார். 

இந்நிலையில்  ரிசர்வ் வங்கி அறிவிப்பை தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கியும் (SBI) கடன் வட்டியை 0.75 சதவீதம் குறைத்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த மாதம் 1-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . சந்தை அடிப்படையில் மற்றும் ரெப்போ வட்டி அடிப்படையிலான கடன்களுக்கு இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest