இன்று சச்சின் பைலட் ஆதரவாளர்கள் மனு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை .!

தகுதிநீக்க நோட்டீஸ்களுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் ஆதரவு  எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

தகுதிநீக்க நோட்டீஸ்களுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் ஆதரவு  எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும்  துணை முதலமைச்சர்  சச்சின் பைலட் இடையேயான பிளவு காரணமாக  சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லி சென்றார். சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் இரண்டு முறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.

இதனால், மாநில சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி கடந்த ஜூலை 14- ம் தேதி தகுதிநீக்க நோட்டீஸை சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பினார். இதைத்தொடர்ந்து, நோட்டீஸை ரத்து செய்ய கோரி சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள்  ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரஜித் மஹந்தி மற்றும் நீதிபதி பிரகாஷ் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், தகுதிநீக்க நோட்டீஸ்களுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் 18 பிற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு  நடைபெற உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, இந்த வழக்கு விசாரணைக்கு விசாரணைக்கு வந்தபோது,  சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது வருகின்ற செவ்வாய்க்கிழமை(அதாவது இன்று ) வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.