தகுதிநீக்க நோட்டீஸ்களுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையேயான பிளவு காரணமாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லி சென்றார். சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் இரண்டு முறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால், […]
ராஜஸ்தான் மாநிலத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த மாநில அரசு ஊழியர்களும், போக்குவரத்து ஊழியர்களும் “பாஜக அல்லாத ராஜஸ்தானை அமைத்திடுவோம்” என்ற உறுதிமொழியுடன் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்டிருக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டமன்றத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதி உடனடியாக அமலுக்கு வந்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ஊழியர்கள் இவ்வாறு தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் டிசம்பர் 7 அன்று நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள், தங்களுக்கு 7ஆவது ஊதியக் […]
ராஜஸ்தானில் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி பெண்களுக்கு இன்று இலவச பேருந்து பயணத்திற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து இன்று இரவு 12 மணி வரை 24 மணிநேரத்திற்கு பெண்கள் மாநிலத்தின் எந்த பேருந்திலும் பயணம் செய்ய இலவச சேவையை அறிவித்துள்ளது. சாதாரண மற்றும் எக்பிரஸ் பேருந்துகள் உள்ளிட்ட ராஜஸ்தான் மாநில போக்குவரத்து அரசுப் பேருந்துகளில் இச்சேவை அமல்படுத்தப்பட்டுள்ளதாக பேருந்துக்கழக செய்தித் […]
டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் மூடுபனி காணப்படுகிறது. எதிரில் இருக்கும் பொருள்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால், நேற்று ஒரே நாளில் மட்டும் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. அதேபோல், ஏராளமான வெளியூர் ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகையும் தாமதமானதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர். இன்றும், கடும் பனிமூட்டத்தால், 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 20 […]