14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி நிதி ஒதுக்கீடு – மத்திய நிதியமைச்சகம்

தமிழகம் உள்ளிட்ட  14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது நிதியமைச்சகம்.

தமிழகம் உள்ளிட்ட  14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது நிதியமைச்சகம்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மத்திய,மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய நிதியமைச்சகம்  ஆந்திரா,அசாம்,ஹிமாச்சல் பிரதேஷ், கேரளா, மணிப்பூர்,மேகாலயா,மிசோரம்,நாகலாந்து,பஞ்சாப்,தமிழ்நாடு,திரிபுரா, உத்தரகாண்ட் ,மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.6195 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த நிதியில் கேரளாவிற்கு  அதிகபட்சமாக ரூ.1276 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பஞ்சாபிற்கு ரூ.638 கோடியும் ,மேற்கு வங்கத்திற்கு ரூ.417 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று  பிரதமர் மோடி  மாநில முதல்வர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், ஊரடங்கு தளர்வால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்தும், பொருளாதார நடவடிக்கைகளை குறித்தும் பேசப்பட்டது .பிரதமர் மோடியுடனான ஆலோசனையில் தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்று, கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு நிதியாக உடனடியாக ரூ.2000 கோடி மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.ஆனால் தற்போது மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்  தமிழகத்துக்கு ரூ.335  கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

unknown node