அரசியலில் களமிறங்கும் ராபர்ட் வதேரா…தொண்டர்கள் அழைப்பு…!!
- மக்களவை தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பாஜக கட்சியும் , ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
- பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா அரசியலுக்கு வரவேண்டுமென்று உத்தரபிரதேச மாநிலத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளை பாரதீய ஜனதா கட்சியும் , மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து வலுவான கூட்டணி மற்றும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் அரசியல் தொடர்பு இல்லாமல் இருந்த பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பதவியை வழங்கியது.
இந்நிலையில் , பிரியங்கா காந்தி_யின் கணவர் ராபர்ட் வதேராவின் மக்களவை தேர்தலில் போட்டியிடுமாறு உத்தரப்பிரதேசத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன . மேலும் ராபர்ட் வாதோரா மக்கள் பணியை செய்ய அரசியலுக்கு வரும் வகையில் சூசகமாக கருத்து தெரிவித்த சூழலில் தற்போது அவருக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் ராபர்ட் வதோராவுக்கு ஆதரவாகவும் , எதிராகவும் தொடர்ந்து எதிர்ப்பானது கிளம்பி வருகின்றது.