நாளை சிறப்பு ரயில் இயக்கம் -முன்பதிவு தொடங்கியது.!

Default Image

நாளை முதல் 15 நகரங்களுக்கு சிறப்பு ரயில் இயங்க உள்ளநிலையில் அந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.

கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் அனைத்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின் ஊரடங்கில் பல  தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், பயணிகள் ரயில் படிப்படியாக தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக மும்பை, பெங்களூரு, சென்னை உட்பட 15 நகரங்களுக்கு நாளை முதல் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த, சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கயுள்ளது. முன்பதிவை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் மட்டுமே  செய்யமுடியும் என  ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து  முன்பதிவு தொடங்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்