OTT தளங்களின் செயல்பாடுகள் மற்றும் சமூக வலைதள கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய விதிமுறைகளை மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ளனர். அதில்,
இந்தியாவில் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 53 கோடி, யூடியூப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 44.8 கோடி, ஃபேஸ்புக் 41 கோடி, இன்ஸ்டாகிராம் 21 கோடி, டிவிட்டர் 1. 75 கோடி என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களை அவதூறுகள், வதந்திகளை பார்ப்பதற்காக பயன்படுத்துவதை ஏற்கமுடியாது.
புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் பெண்கள் குறித்த ஆபாச படங்களை சமூக வலைதளம் நீக்கவேண்டும்.
புகார்களை கையாள்வதற்கு ஒவ்வொரு சமூக வலைத்தள நிறுவனங்களுக்கும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
தவறான தகவலை பரப்பகூடிய முதல் நபர் யார் என்ற விஷயத்தை சமூகவலைதளங்கள் கண்டறிய வேண்டும்.
அரசு, நீதிமன்றம் தகவல்களை கேட்டால் சமூக வலைதளங்கள் நிச்சயம் வழங்க வேண்டும்.
ஒருவரின் கணக்கை நீக்கினால் அது குறித்த விவரத்தை சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனம் தரவேண்டும்.
ஓடிடி நிறுவனங்களுக்கு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது அவசியமாகிறது.
ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் மாதம் ஒரு முறை எவ்வளவு புகார்கள் வருகிறது என்பதை விரிவான தகவல்களை வழங்க வேண்டும்.
நாட்டில் அனைவருக்கும் சுதந்திரம் இருக்கிறது; ஆனால் அதற்கென்று சில வரைமுறைகள் உள்ளன.