Flood Relief Amount : மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தற்போது 276 கோடி ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. தமிழகத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் இரு புயல்கள் தாக்கின. அதில் முதலாக மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டன. அதே போல, டிசம்பர் இரண்டாம் பாதியில் தென்தமிழகத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய […]
கொரோனா வைரஸ் 2 வது அலை பரவுவதற்கு 5ஜி நெட்வொர்க்கின் கதிர்வீச்சு காரணம் என சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவல் உண்மை இல்லை இன்று மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசானது 5ஜி சோதனை செய்ய 13 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,கொரோனா வைரஸின் 2 வது அலை பரவுவதற்கு 5 ஜி நெட்வொர்க்கின் பரிசோதனையே காரணம்.ஏனெனில்,அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காற்றை நச்சுத்தன்மை உடையதாக […]
மத்திய அரசானது ஆமை வேகத்தில் செயல்படாமல்,முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிரைக் காப்பற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில்,அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.முதற்கட்டமாக,முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டது. இதனைத்தொடர்ந்து,மே 1 ஆம் தேதியிலிருந்து 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,சில தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அதிக […]
அப்பல்லோ,மேக்ஸ் மற்றும் ஃபோர்டிஸ் போன்ற தனியார் மருத்துவமனைகள் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி போட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,ஒவ்வொரு நாளும் 4 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும்,3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.எனவே,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.முன்களப்பணியாளர்கள் மற்றும் 45 முதல் 60 வயது வரை […]
நாடு முழுவதும் கொரோனா தொற்றானது அதிகரித்துவரும் நிலையில்,மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தினை இலவசமாக வழங்க வேண்டும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா இரண்டாவது அலையானது நாடு முழுவதும் அதிக அளவில் பரவி வருகிறது.இந்த நிலையில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புதிய விதிமுறைகளைப் பின்பற்றி,கொரோனா தடுப்பூசி நிறுவனங்கள் தடுப்பூசியின் விலையை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளன. அதன்படி,கோவிஷீல்டு தடுப்பூசி விலையானது தற்போது விற்கப்படும் விலையை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,கேரள […]
கொரோனா மீட்புப் பணியில் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா மீட்புப் பணியின் போது உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை ஏப்ரல் 26 ஆம் தேதியன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்தக் காப்பீட்டு திட்டத்தில்,22 லட்சம் மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு 1 லட்சத்து […]
OTT தளங்களின் செயல்பாடுகள் மற்றும் சமூக வலைதள கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய விதிமுறைகளை மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ளனர். அதில், இந்தியாவில் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 53 கோடி, யூடியூப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 44.8 கோடி, ஃபேஸ்புக் 41 கோடி, இன்ஸ்டாகிராம் 21 கோடி, டிவிட்டர் 1. 75 கோடி என மத்திய அரசு அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களை அவதூறுகள், வதந்திகளை பார்ப்பதற்காக பயன்படுத்துவதை ஏற்கமுடியாது. புகார் அளித்த 24 மணி […]
அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31ந்தேதி வரை திறக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் அனிதா கர்வால் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கும் இது குறித்து அனுப்பிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது கல்வி நிறுவனங்கள் குறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது: உள்துறை அமைச்சகம் ஊரடங்கு காலங்கில் சில தளர்வுகளை அளித்தாலும், பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஜூலை 31-ம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் […]
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞரை மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணன் நியமனமிக்கப் பட்டுள்ளார்.இவர் ஜூலை 1 ம் தேதி சங்கரநாராயணன் பதவியேற்பார் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் இதுவரை மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா மற்றும் ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’ என்கிற நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு, ‘நீட்’ நுழைவு தேர்வு, மே, 3ல் நடைபெற்று இருக்க வேண்டும் ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக ஜூலை., 26க்கு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் […]
பொது முடக்கத்தால் நிதி நெருக்கடியால் தவிக்கும் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் விடுத்துள்ளதை அடுத்து அரசுக்கு பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனால் அனைத்து மாநில அரசுகளும் வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடியால் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து மாநில அரசுக்கும் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு […]
சீனாவில் உருவாகி இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இந்தியா என பல நாடுகளை குறிவைத்து வேகமாக தாக்கிக்கொண்டு உள்ளது. இந்த கொரோனா வைரஸ் தற்பொழுது மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை இந்தியாவில் மட்டும் தாக்கி உள்ளது. இதனால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவும் தற்போது வரை அமலில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த கொரோனா தொற்று சிகிச்சையில் ஈடுபட்டு வரும் மருத்துவ ஊழியர்களில் மார்ச் 31இல் பணி நிறைவு பெரும் ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு அளிப்பதாக மாநில அரசு அறிவித்திருந்தது. அது போல, மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் 31ஆம் தேதி ஓய்வு பெறும் ஒல்லியார்களின் பணிக்காலம் நீட்டிக்கப்படும் என தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளிக்கும் பொருட்டு, மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்கு மத்திய அரசின் […]
இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 979 பேர் பாதிக்கப்பட்டு, 25 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி வருபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தடுக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்ட […]
ஏர் இந்தியா நிறுவனத்தை யாரும் வாங்க முன்வராவிட்டால், 6 மாதங்களுக்குள் இழுத்து முட வேண்டியிருக்கும் என தகவல். கடந்த நிதி ஆண்டில் மட்டும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.8556 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை யாரும் வாங்க முன்வராவிட்டால், 6 மாதங்களுக்குள் இழுத்து முட வேண்டியிருக்கும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். செயல்பாட்டு செலவுக்காக ரூ.2400 கோடி கேட்டிருந்த நிலையில், மத்திய அரசு ரூ.500 கோடி மட்டும் வழங்கியதாக அவர் கூறினார். பின்னர் […]
சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவது தற்போது அதிகமாகி விட்டது. இதனை கட்டுப்பாடுத்த தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளன. அதாவது சமூக வலைதள கணக்குடன் அதனை உபயோகப்படுத்தும் பயனர்கள் தங்களது ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று கூறுகையில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்புவது தற்போது […]
சென்னை பெருவெள்ளம், கேரள வெள்ளம், ஒரிசா வெள்ளம் போன்ற நாட்டில் பேரிடர் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில் பேரிடர் மீட்பு படையில் குறைவான வீரர்களே உள்ளதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் குழுவானது மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை பரிசீலித்து ஏற்றுக்கொண்ட மத்திய அரசானது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ சி.ஆர்.பி.ஏஃப், ரேபிட் ஃபோர்ஸ், எல்லை பாதுகாப்பு படையினர்,அதிவிரைவு படை போன்ற பிரிவுகளை சேர்ந்த மத்தியப்படை வீரர்கள் இனி […]
மத்திய அரசானது, 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிட்டு இருந்தது. இந்த சாலையானது, பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் ஆக்கிரமித்து உருவாகும்படி அமைந்தது. இதனால் இந்த சாலை அமைக்க மக்கள் தற்போது வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாய நிலங்களை அரசு, கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னை- சேலம் […]
கேரளா கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் மாநிலமே நிலைகுழைந்தது என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு அம்மாநிலத்தில் உள்ள பலத்தரப்பட்ட மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். இந்நிலையில் நாடே கேரளாவிற்கு கரம் கொடுத்தது.இதில் மக்கள் ,நடிகர்கள்,அரசியல் பிரபலங்கள் அண்டை நாடுகள் என அனைவரும் கரம் கொடுத்தனர்.இந்நிலையில் இந்த வெள்ளமானது அம்மாநிலத்தில் சுமார் ரூ.4700 கோடி அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.மேலும் இந்த நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் […]
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தும் முறை மற்றும் கட்டண விகிதங்களை மறுசீரமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்தும் முறையில் அதிக கட்டணம், மற்றும் நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் மாறுபட்ட கட்டண விகிதம்,வாகன ஒட்டிகளுக்கு காலதாமதம் அதனால் ஏற்படும் சச்சரவுகள் ஆகியவை தொடர்வதால் மின்னணு முறையில் கட்டணங்களைச் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கமுடிவு மத்திய அரசு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தெரிவித்த நெடுஞ்சாலை ஆணை அதிகாரிகளில் […]